Posts

Showing posts from August, 2019
Image
கவிக்குயில் விருது பெற்று தனியார் பள்ளி மாணவன் சாதனை: அம்மா தமிழ்ப்பீடம் சார்பில் இன்று(31.08.2019) நடந்த கவியரங்கத்தில் க.செல்வமுருகன் என்ற மாணவருக்கு "அம்மா கவிக்குயில் பட்டமும், விருதும்"வழங்கபட்டது.*அம்மா தமிழ்ப்பீடம் * சார்பில் உலகத் தமிழ்ச் சங்கம்,மதுரையில் *இன்று அம்மா பன்னாட்டுத் தமிழ் முதல் மாநாடு* நடந்தது.இதில் புரட்சித் தலைவி  அம்மா புகழ் பாடும் அம்மா புகழ் நானூறு கவியரங்கம் நடைபெற்றது.இதில் மதுரை திருநகரைச் சேர்ந்த க.செல்வமுருகன் என்ற மாணவருக்கு கவிக்குயில் விருது வழங்கப்பட்டது.இந்த மாணவர் அந்தப் பகுதியில் உள்ள *எஸ்.பி.ஜே.மேல்நிலைப் பள்ளி,அவனியாபுரம்* என்ற தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறார்.கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவர் சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு கவிதை எழுதி வந்தார்.இது அந்த மாணவரின் முதல் கவியரங்கமாகும்.இதில் கவி பாடியமைக்காக க.செல்வமுருகன் அவர்களுக்கு,அம்மா கவிக்குயில் விருதும்,பட்டமும் வழங்கப்பட்டது.இது அவரின் கவிப் பயணத்தில் கிடைத்த முதல் பட்டம்,முதல் விருது என்பது குறிப்பிடத்தக்கது.
Image
கவிக்குயில் விருது பெற்று அரசுப்பள்ளி மாணவன் சாதனை: அம்மா தமிழ்ப்பீடம் சார்பில் இன்று(31.08.2019) நடந்த கவியரங்கத்தில் வரதராஜன் என்ற மாணவருக்கு "அம்மா கவிக்குயில் பட்டமும், விருதும்"வழங்கபட்டது.*அம்மா தமிழ்ப் பீடம்* சார்பில் உலகத் தமிழ்ச் சங்கம்,மதுரையில் *இன்று அம்மா பன்னாட்டுத் தமிழ் முதல் மாநாடு* நடந்தது.இதில் புரட்சித் தலைவி  அம்மா புகழ் பாடும் அம்மா புகழ் நானூறு கவியரங்கம் நடைபெற்றது.இதில் *மதுரை மேலூர் அருகிலுள்ள அ.வல்லாளபட்டி அரசுமேல்நிலைப் பள்ளி*யில் 11ம் வகுபபு பயிலும் வரதராஜன் என்ற மாணவருக்கு அம்மா கவிக்குயில் விருதும்,பட்டமும் வழங்கப்பட்டது.
Image
கவிக்குறள் விருது பெற்று அரசுப் பள்ளி மாணவன் சாதனை: (25-08-2019 ) அன்று தர்மபுரியில் நடந்த முப்பெரும் விழாவில் வரதராஜன் என்ற மாணவருக்கு கவிக்குறள் விருது வழங்கப்பட்டது.தர்மபுரி மாவட்டத்தில் இதயம் சமூக நல அறக்கட்டளை சார்பில்  முப்பெரும் விழா நடந்தது.இதற்கு முன்னதாகவே சாதனையாளர்கள் தேர்வு நடந்தது.இதில் மதுரை மாவட்டம்,மேலூர் அருகில் உள்ள அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் வரதராஜன் என்ற மாணவர் இலக்கியப் பணிக்காக கவிக்குறள் விருதுக்கு தேர்வாகியிருந்தார்.இன்று நடந்த முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக சொல்லின் செல்வர் திரு.ஆவடிக்குமார் ஐயா அவர்கள் கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.இதில் வரதராஜன் என்ற அந்த மாணவருக்கு கவிக்குறள் விருது வழங்கப்பட்டது.இது அந்த மாணவன்  பெறுகின்ற பத்தாவது விருது என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்பாக கவிஞர் பட்டம்,கவிமாமணிப் பட்டம்,பாவலர் பட்டம் பெற்றுள்ளார் என்பதும்,கவிமாமணி உட்பட இந்த விருதோடு பத்து விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Image
பேச்சாளர் விருது பெற்று அரசுப் பள்ளி மாணவன் சாதனை: (18-08 2019 ) அன்று "செந்தமிழச் சாரல்" கவிக்குழுமத்தின் மூன்றாம் ஆண்டு விழா திருச்சியில் "செயின்ட் ஜோசப் கல்லூரியில்" நடந்தது.இதில் கவியரங்கம்,பல்சுவை அரங்கம்,பட்டிமன்றம் ஆகியன இடம் பெற்றன.இதில் மதுரை மாவட்டம்,மேலூர் அருகிலுள்ள அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு  பயிலும் வ.வரதராஜன் என்ற மாணவர் பட்டிமன்றத்தில் "ஒரு திரைப்படத்தில் மக்கள் விரும்புவது - பாடலே" என்னும் தலைப்பில் பேசினார்.இது அவருடைய முதல் பட்டிமன்றமாகும்.இதற்காக அந்த மாணவருக்கு "பேச்சாளர் விருது",சான்றிதழ்,பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது.
Image
"கவிக்கோ விருது" பெற்று அரசுப் பள்ளி மாணவன் சாதனை: (10-08-2019 )  அன்று பாண்டிச்சேரியில் "ரெவேஸ் சொசியால் சங்கத்தில்" நடந்த முப்பெரும் விழாவில் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டி,அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் வ.வரதராஜன் என்ற மாணவருக்கு  "கவிக்கோ விருது" வழங்கப்பட்டது."கவிதை வானில் கவிமன்றம்"என்ற கவிக்குழுமம் சார்பாக இந்த கவிக்கோ விருதுக்காக புலனம் (வாட்ஸ்அப்) வழியாக ஐந்து வாரமாகக் கவிதைப் போட்டிகள் நடந்தன.இந்த கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றமைக்காக வ.வரதராஜன் என்ற மாணவருக்கு ''கவிதை வானில் கவிமன்றம்" பத்திரிக்கை ஆசிரியர்,தலைவி திருமதி.கலா விசு அவர்களால் "கவிக்கோ விருது" வழங்கப்பட்டது.தொடர்ந்து கவிதைகள் எழுதி வரும் இந்த மாணவரின் அடுத்த ஒரு பெரிய சாதனை இது!இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சொல்லின் செல்வர் திரு.ஆவடிக்குமார் ஐயா அவர்களும்,பண்ருட்டி செந்தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் திரு.சுந்தர பழனியப்பன் ஐயா ஆகியோர் கலந்து கொண்டனர்!
Image