கவிதை உலகில் வலம் வருகிற அரசுப் பள்ளி மாணவனின் அடுத்த சாதனை! ********************************************* கவிஞர் சங்கமம் என்ற குழுமம் சார்பில் புலனம் வழியாக நடந்த தினசரி கவிதைப் போட்டியில் நான்காம் பரிசு பெற்றதற்காக 28-07-2019 அன்று புதுச்சேரி, புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த விழாவில் மதுரை,மேலூர் அருகேயுள்ள அ.வல்லாளபட்டி அரசுப் பள்ளியில் பயிலும் வ.வரதராஜன் என்ற மாணவருக்கு வெள்ளி நாணயமும் சான்றிதழும் வழங்கப்பட்டது.இந்த விழாவில் பாவேந்தர் பாரதிதாசனின் பேரன் கலைமாமணி கோ.ரவி ஐயாவும் நேர்மையான அரசியல்வாதி மக்கள் சேவையை விரும்பும் மனிதர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தனவேலு ஐயா அவர்களும் கலந்து கொண்டனர்.