"கவிக்கோ விருது" பெற்று அரசுப் பள்ளி மாணவன் சாதனை:

(10-08-2019)  அன்று பாண்டிச்சேரியில் "ரெவேஸ் சொசியால் சங்கத்தில்" நடந்த முப்பெரும் விழாவில் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டி,அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் வ.வரதராஜன் என்ற மாணவருக்கு  "கவிக்கோ விருது" வழங்கப்பட்டது."கவிதை வானில் கவிமன்றம்"என்ற கவிக்குழுமம் சார்பாக இந்த கவிக்கோ விருதுக்காக புலனம் (வாட்ஸ்அப்) வழியாக ஐந்து வாரமாகக் கவிதைப் போட்டிகள் நடந்தன.இந்த கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றமைக்காக வ.வரதராஜன் என்ற மாணவருக்கு ''கவிதை வானில் கவிமன்றம்" பத்திரிக்கை ஆசிரியர்,தலைவி திருமதி.கலா விசு அவர்களால் "கவிக்கோ விருது" வழங்கப்பட்டது.தொடர்ந்து கவிதைகள் எழுதி வரும் இந்த மாணவரின் அடுத்த ஒரு
பெரிய சாதனை இது!இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சொல்லின் செல்வர் திரு.ஆவடிக்குமார் ஐயா அவர்களும்,பண்ருட்டி செந்தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் திரு.சுந்தர பழனியப்பன் ஐயா ஆகியோர் கலந்து கொண்டனர்!

Comments

Post a Comment

Popular posts from this blog