கவிக்குயில் விருது பெற்று தனியார் பள்ளி மாணவன் சாதனை:
அம்மா தமிழ்ப்பீடம் சார்பில் இன்று(31.08.2019) நடந்த கவியரங்கத்தில் க.செல்வமுருகன் என்ற மாணவருக்கு "அம்மா கவிக்குயில் பட்டமும், விருதும்"வழங்கபட்டது.*அம்மா தமிழ்ப்பீடம் * சார்பில் உலகத் தமிழ்ச் சங்கம்,மதுரையில் *இன்று அம்மா பன்னாட்டுத் தமிழ் முதல் மாநாடு* நடந்தது.இதில் புரட்சித் தலைவி அம்மா புகழ் பாடும் அம்மா புகழ் நானூறு கவியரங்கம் நடைபெற்றது.இதில் மதுரை திருநகரைச் சேர்ந்த க.செல்வமுருகன் என்ற மாணவருக்கு கவிக்குயில் விருது வழங்கப்பட்டது.இந்த மாணவர் அந்தப் பகுதியில் உள்ள *எஸ்.பி.ஜே.மேல்நிலைப் பள்ளி,அவனியாபுரம்* என்ற தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறார்.கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவர் சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு கவிதை எழுதி வந்தார்.இது அந்த மாணவரின் முதல் கவியரங்கமாகும்.இதில் கவி பாடியமைக்காக க.செல்வமுருகன் அவர்களுக்கு,அம்மா கவிக்குயில் விருதும்,பட்டமும் வழங்கப்பட்டது.இது அவரின் கவிப் பயணத்தில் கிடைத்த முதல் பட்டம்,முதல் விருது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment