கவிக்குறள் விருது பெற்று அரசுப் பள்ளி மாணவன் சாதனை:
(25-08-2019) அன்று தர்மபுரியில் நடந்த முப்பெரும் விழாவில் வரதராஜன் என்ற மாணவருக்கு கவிக்குறள்
விருது வழங்கப்பட்டது.தர்மபுரி மாவட்டத்தில் இதயம் சமூக நல அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடந்தது.இதற்கு முன்னதாகவே சாதனையாளர்கள் தேர்வு நடந்தது.இதில் மதுரை மாவட்டம்,மேலூர் அருகில் உள்ள அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் வரதராஜன் என்ற மாணவர் இலக்கியப் பணிக்காக கவிக்குறள் விருதுக்கு தேர்வாகியிருந்தார்.இன்று நடந்த முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக சொல்லின் செல்வர் திரு.ஆவடிக்குமார் ஐயா அவர்கள் கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.இதில் வரதராஜன் என்ற அந்த மாணவருக்கு கவிக்குறள் விருது வழங்கப்பட்டது.இது அந்த மாணவன் பெறுகின்ற பத்தாவது விருது என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்பாக கவிஞர் பட்டம்,கவிமாமணிப் பட்டம்,பாவலர் பட்டம் பெற்றுள்ளார் என்பதும்,கவிமாமணி உட்பட இந்த விருதோடு பத்து விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment