இன்று (07-09-2019) பாண்டியன் சரஸ்வதி கல்லூரி,அரசனூர்,சிவகங்கை யில் நடந்த ஆசிரியர் தின விழாவில் வரதராஜன் என்ற 11ம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவருக்கு சிறந்த கவிஞர் விருது வழங்கப்பட்டது.

இந்த மாணவர் மதுரை மேலூர் அருகிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி,அ.வல்லாளபட்டி
பள்ளியில் 11ம் வகுப்பு பயில்கிறார்.இவர் கவிதை எழுதுவதில் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார்.

இது குறித்து,அந்த மாணவர் கூறியதாவது;

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு என்னைப் பற்றிய செய்தி மதுரை தினமலர் நாளிதழில் வெளியானது.இதனைக் கண்ட கல்லூரி சேர்மன் திரு.மலேசியா எஸ்.பாண்டியன் ஐயா அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு அவர்களது கல்லூரி ஆசிரியர் தின விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்கள்.இதனை அடுத்து இன்று நடந்த ஆசிரியர் தின விழாவில் எனக்கு சிறந்த கவிஞர் விருதும்,பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கி கல்லூரி சேர்மன் அவர்கள் சிறப்பு செய்தார்கள்.இந்த விழாவில் ஐயாவும்,அவரது மனைவியார் திருமதி.சரஸ்வதி அவர்களும் ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

இந்த விருது எனக்கு கிடைக்க காரணமாக இருந்த, என்னைத் தமிழ் துறையில் முதலில் ஈடுபடுத்திய ஆசிரியர் திரு.செந்தில்குமார் அவன்களுக்கும், தினமலர் நாளிதழ் நிருபர் திரு.சரவணன் ஐயா அவர்களுக்கும், தினமலர் நாளிதழுக்கும், 
எனக்கு பொருளாதார அளவில் உதவிகள் செய்து என் சாதனைகளுக்கு துணை நிற்கும் டாக்டர்.பேரா
திரு.ராஜன்,லயன்ஸ்கிளப் ஐயா அவர்களுக்கும்,
நாளிதழுக்கு செய்தி கொடுத்து உதவிய எம் பள்ளியின் தலைமையாசிரியர் திரு.கிறிஸ்டோபர் ஜெயசீலன் ஐயா அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்று அந்த மாணவர் கூறினார்.

விருது பெற்ற மாணவரை அந்த பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Comments

Popular posts from this blog