என்ன இல்லை எம் தமிழில்?


என்ன இல்லை எம் தமிழில்?


உலகில் முதலாகத் தோன்றி,மூத்த
மொழியாக இருக்கின்றது எம் தமிழ்!
அந்நியரையும் அன்போடு  ஈர்த்து தரணியில்
ரசிகர்களை பெற்றுள்ளது எம் தமிழ்!
முன்னோடியான பழம் பெரும் இலக்கணங்களையும்,
மூத்த பல்வேறு இலக்கிய அமைப்புகளையும்
கொண்டு மிளிர்கிறது எம் தமிழ்!
முச்சங்கம் வளர்த்த மூத்த மொழியும்,
செவ்வியல் தன்மைகளைக் கொண்டதும்,சிறந்த
மொழியும் எம் அன்னைத் தமிழே!
செந்தமிழ் பைந்தமிழ் என்ற செல்லப்
பெயர்களைக் கொண்டதும் எம் தாய் தமிழே!
ஒலிப்பதற்கு இனிமையான ஓசையைக் கொண்டாய்!
காதலிக்காதவரையும் உன்னை காதலிக்க வைத்தாய்!
தரணிக்கே தாய் மொழியாய் திகழ்கின்றாய்!
பிற மொழிகளையும் வளர வைக்கின்றாய்!
என்ன இல்லை எம் தமிழில்?
பெயர் பெற்ற முதுமை இல்லையா?
ஈர்க்கும் தன்மை தான் இல்லையா?
சிறந்த நூல் அமைப்புகள் இல்லையா?
செல்லப் பெயர்கள் தமிழுக்கு இல்லையா?
இனிமையான ஓசைதான் தமிழுக்கு இல்லையா?
எல்லாம் இருக்கின்றது எம் தமிழில்!
சிறந்த பண்பும் உண்டு எம் தமிழில்!



கவிஞர்.வ.வரதராஜன்,
மதுரை.
அலைபேசி:8220574435



Comments

  1. மிக அருமை..வாழ்த்துக்கள்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog